DAN BROWN இவரைப் பற்றியும் இவரது படைப்புகளைப் பற்றியும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். இவரது படைப்புகள் மிகுந்த தனிதன்மையுடையது. இவரது புதினங்கள் அனைத்தும் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும். உண்மைச் சம்பவங்கள் என்பதை விட சாமான்யர்கள் அறிந்திடாத, சர்ச்சைக்குரிய, மறைக்கப்பட்ட ரகசிய  நிகழ்வுகளின் அடிப்படையில் இருக்கும். எடுத்துக் காட்டாக இவரது "THE DAVINCI CODE" புதினத்தைக் கூறலாம். இதிலுள்ள அனைத்து அமைப்புகளும், இடங்களும் உலகில் உண்டு. இந்தப் புதினம் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது என்பது உங்களுக்கு தெரியும். அதே போல் "ANGELS AND DEMONS" புதினமும் கூட.



முதன் முதலில் "THE DAVINCI CODE" திரைப்படத்தை என் நண்பன் ஒருவன் அறிமுகப்படுத்தியதாலேயே என்னால் பார்க்க முடிந்தது. எனக்கு எந்த வகையான SUBJECT பிடிக்குமோ அந்த வகையறாவில் நான் பார்த்த முதல் திரைப்படமாக "THE DAVINCI CODE" திரைப்படத்தைக் கருதுகிறேன்.

அதன் பின் வெளிவந்த "ANGELS AND DEMONS" திரைப்படமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உங்களில் சிலருக்கு எனது கருத்தில் மாற்றுக் கருத்து இருக்கலாம். உங்களுக்கு இந்தப் படங்களைப் பிடிக்காமல் கூட இருக்கலாம். ஆனால் இந்த இரு படங்களையும் மற்ற படங்களைப் போல் அல்லாமல் மிகவும் உன்னிப்பாக கவனித்தால் கண்டிப்பாக பிடிக்கும். ஒவ்வொரு வசனத்திலும் நீங்கள் கேட்கும் பெயர்களை இணையத்தில் GOOGLE செய்து பாருங்கள், ஒரு மிகப் பெரிய வரலாற்று நிகழ்வைப் பற்றி அறிய இயலும். அப்புறம் உங்களுக்கே புரியும் டேன் ப்ரௌனின் அசாத்திய உழைப்பும், ஆராய்ச்சியும். உறுதியாக சொல்கிறேன் நீங்கள் அவரின் அனைத்து புதினங்களையும் வாசிப்பீர்கள். அத்தோடு நில்லாமால் அதில் வரும் ஒவ்வொரு நிகழ்வையும் அறிய முனைவீர்கள். உதாரணத்திற்கு "The Malleus Maleficarum (Hammer of the Witches)" என்ற புத்தகத்தைக் கூறலாம். டாவின்சி கோட் திரைப்படத்தின் தமிழாக்கத்தில் இதனை "சூனியக்காரியின் சுத்தியல்
" என்று ராபர்ட் லேங்க்டன் (TOM HANKS) குறிப்பிடுவார்.



TOM HANKS அவரைப் பற்றி சொல்லாமல் இருக்கவே முடியாது. TOM HANKS திரையில் பார்க்கும் பொழுது ராபர்ட் லேங்க்டனாகவே என் கண்களுக்கு தெரிகிறார். அவர் இல்லாத டேன் பிரவுன் திரைப்பட தொடர்களை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

எனவே DAN BROWN -ன் புதினங்களையும், திரைப்படங்களையும் தவறவிடாதீர்கள்.

 

DAN BROWN -ன் புதினங்கள்:

Digital Fortress, 1998

 




மேலே இடம்பெற்றுள்ள அட்டைப் படத்தை நீங்கள் அப்படியே பார்த்தாலும், தலைகீழாக பார்த்தாலும் எந்த மாற்றமும் இருக்காது என்பது சித்திரத்தின் சிறப்பு. இந்த புத்தகத்தில் வரும் Illuminati தொடர்பான  வார்த்தைகளையும் அப்படியே.












DAN BROWN -ன் புதினங்கள் TORRENT லிங்க் :  Dan Brown complete collection

 


DAN BROWN -ன் புதினங்களைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படங்கள்:

The Da Vinci Code, 2006




The Lost Symbol (வரவிருக்கும் அடுத்த திரைப்படம்)



The Lost Symbol தொடர்பான வீடியோக்கள்:

Discovery Hunting The Lost Symbol:




Secrets of The Lost Symbol:


YOUTUBE VIDEO LINK:





Secrets Of The Lost Symbol - Part 5 


பி.கு. மேலதிக தகவல்களுக்காக முக்கிய வார்த்தைகள், புத்தக தலைப்புக்கள் ஆகியவற்றில் விக்கிபீடியா லிங்குகள் அளிக்கப்பட்டுள்ளன.